×

இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!

இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம் செய்துள்ளனர். சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள கம்மின்ஸ் இந்தியா திரும்பாததால் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 2வந்து டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்து.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் வரும் மார்ச்1ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவுடனான 2 போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ள கம்மின்ஸ் இந்தியா திரும்பாததால் துணை கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 2 போட்டிகளில் விளையாடாமல் இருந்த மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அடுத்த போட்டியில் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Steve Smith ,Australia ,Indian , Steve Smith appointed as Australian captain in the 3rd Test match against India!
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...